கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.