இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுடன் பேச்சு நடத்தினார்.அப்போது, சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலங்கை கடமைப்பட்டுள்ளதை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது கொரோனா தொற்றுநோய் இரு தரப்பினருக்கும் இன்னும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என கூறினார்.
கொழும்பில் ஜெய்சங்கருடனான சந்திப்புகளின் போது கொரோனா தடுப்பூசி பெற இலங்கை தலைமை முறையாக இந்தியாவிடம் உதவியைக் கோரி உள்ளது.