நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த 12 வயதுடைய ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே நேற்று (11) அதிகாலை இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து உடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையிலே உயிரிழந்துள்ளார். நோட்டன் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 07 கல்வி பயிலும் சிறுவன் பசித்தவன் குறுந்திரைப்படத்திலும் பாடசாலை மாணவனாக நடித்துள்ளார். மேலும் , சிறுவனை தீண்டிய பாம்பை இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்குற்படுத்தப்பட்டபோது பாம்பு தீண்டி விசமானதாலே உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.