உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஸ்கைப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சிம் வழங்கியுள்ளார். 2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த வழக்கில் ஷானி அபேசேகர எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சி.ஐ.டி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைநடத்தியது. மட்டக்களப்பு பொலிஸார் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரை கைது செய்யதிருந்தாக அவர் இங்கு சாட்சியமளித்தார்.
இவருக்கு சம்பவத்துடன் தொடர்புள்ளதா என சி.ஐ.டிஉறுதி செய்தாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரே சி.ஐ.டி இதனை உறுதி செய்தாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் கொலைக்கு ஸஹ்ரானின் குழு தொடர்பட்டிருந்ததை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்