உண்மையும் பரிபூரண ஆசீர்வாதமும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உண்மையுள்ள மனிதன் ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
நீதிமொழி 28:20.
இன்று உலகமும் மனிதர்களும் போட்டிபோட்டு நன்மையையும், ஆசீர்வாதத்தையும் பெறஓடகின்றனர். நாமும்கூட விதிவிலக்கல்ல. நாமும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்து ஓடும் எமக்கு தேவன் தரும் வாக்குறுதி, மேலே நாம் வாசித்தஉண்மையுள்ள மனிதன் பரிப10ர ஆசீர்வாதங்களைப் பெறுவான். யார் பரிபூரண ஆசீர்வாதத்தை தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்? உண்மையுள்ள மனுசன் என்பதே பதிலாகும். உண்மையுள்ள மனிதனே தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை பெற்றவனாக இருப்பான். அவனின் உண்மைத் தன்மை வெறும் உதட்டில் இருந்தல்ல. அது அவனின் இருதயத்தில் இருந்தும், அவனது ஒவ்வொரு கிரியைகளுக்கூடாகவும் வெளிவருவதாகும்.
எந்த மனிதரிலும் தன் வாழ்நாளிலே கர்த்தருக்கு உண்மையாக இருந்தவன் எவனும் தாழ்ச்சியடைந்தோ அல்லது, அவமானப்பட்டோ போனதில்லை. இதை நாம் சங்கீதம் 5:12 இல் காணலாம். கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருணியம் என்னும் கேடகத்தினால் அவனை சூழ்ந்துகொள்வீர். இதன் கருத்து தேவன் அவனுக்கு மனமகிழ்ச்சிதரும் சூழ்நிலைகளையும், ஆசீர்வாதத்தையும், தேவ பாதுகாப்பையும் கொடுப்பார். இந்த உண்மையை வேதாகமம் (பைபிள்) நமக்கு தெளிவாக காட்டுகிறது.
தேவனிடத்தில் உண்மையாக இருப்;பது என்பது, அவரை சார்ந்து இருப்பதனால் ஏற்படும் ஓர் வாழ்க்கையாகும். இந்த வாழக்கையில் நாம் நன்மைகளையும், இழப்புக் களையும் சந்திக்க நேரிடும். அந்த இழப்புக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆறதல் ஒன்று உண்டென்பதை நாம் மறக்கக்கூடாது. இது பலருக்கு மிகப்பெரிய கேள்வியாக இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் உண்மை நிலையை அறிவோமானால் அது எமக்கு ஒரு கேள்வியாக இருப்பதில்லை. காரணம் உண்மை உள்ள மனிதன் பூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்ற கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் பொய்யாவதில்லை. தேவனுடனான இந்த உண்மைத்தன்மை என்பது தேவன் கொடுக்கும் ஓர் சாட்சியாகும். இதை நாம் எண்ணாகமம் 12:7. என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவனல்ல. என் வீட்டில் எங்கும் உண்மை உள்ளவன். இந்த மோசேயினுடைய உண்மைத்தன்மை தேவன் அவனுடன் இருந்து மகாபெரிய காரியங்களை செய்ய வைத்தது.
தேவனுடனான உண்மைத்தன்மையை நாம் எமது வாழ்வில் கண்டுகொள்ள அல்லது கடைப்பிடிக்க முதலில் நாம் தேவனை அறிய வேண்டும். அவரை அறிந்து நேசித்து, சேவிக்க நாம் முன்வரவேண்டும். அதாவது அவரை எமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பின் நிச்சயத்தை அவரின் சிலுவை மரணத்தை தியானிப்பதின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தை வாசித்து தியானித்து தேவனின் தன்மையை அறிந்து, அவர் விரும்பாத காரியங்களை எம்மை விட்டு அகற்ற வேண்டும். அப்போது நமது இருதயம் தேவனின் பிரசன்னத்தால் நிரப்பப்படுவதை உணரக்கூடியதாக இருக்கும். நாம் நமது அன்றாட வாழ்வில் ஓர் புதிய அமைதியை, சமாதானத்தை, மகிழ்ச்சியை காணக் கூடியதாக இருக்கும்.
தேவனுக்குப் பிரியாமான மக்களே, நம் வாழ்க்கையில் தேவனுடனான உண்மைத் தன்மை காணப்படுகிறதா? உண்மையில்லாத வாழ்க்கை ஒரு போதும் தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தை கொண்டுவராது. எமது இருதயத்தில் உண்மையும் எமது கரத்தில் பரிசுத்தமும் காணப்படுமானால் நாம் ஒருபொதும் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஓருபோதும் கலங்கவேண்டிய அவசியமில்லை.இன்று தேவனுடனான உண்மைத்தன்மை அல்லது தேவனுடைய பிள்ளையாக நான் இல்லை என்று உணர்வாயானால், இந்த நிமிடமே நீ முதலில் வாசித்த உண்மையுள்ள மனிதன் பரிப10ர ஆசீர்வாதங்களைப் பெறுவான் என்ற தேவனின் வார்த்தையை மனதில் கொண்டவனாக உங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடர்ந்து ஓ,டுங்கள். உங்கள் இருதயங்களில் தேவன் வ்pரும்பும் உண்மைத்தன்மையை அவர் காணட்டும். அப்போது தேவனின் பரிபூரண ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வீர்கள்.
அன்பின் பரலோக பிதாவே, இன்று நீர் உண்மையுள்ள மனிதனாக வாழ்வதன் மூலமே தேவனிடத்தில் இருந்து பரிபூரண ஆசீர்வாதங்களை அடையமுடியும் என்று உணரப் பண்ணியதற்காக உமக்கு நன்றி அப்பா. இதுவரை காலமும் உம்மை அறியாமலும், உமக்கு உண்மையில்லாமலும் வாழ்ந்து வந்ததற்கு என்னை மன்னியும். இன்றிலிருந்து உமது பிள்ளையாக என்னை ஏற்றுக்கொள்ளும் அப்பா. என் வாழ்வில் உம்மை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பதிய வாழக்கை வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன். காத்து வழிநடத்தும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark