புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் இளையராஜா தொடங்கியுள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் தியாகராயநகரில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரை தற்போது தனது புதிய ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக இளையராஜா மாற்றி இருக்கிறார்.
இந்த ஸ்டுடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்கினார். ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த ஸ்டுடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்குகிறார். இந்த படத்தில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகாசின் தங்கை பவானி ஶ்ரீ நடிக்கிறார்.சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் படத்துக்கு முதல் தடவையாக இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.