சசிகலா வருகையைக் கண்டு அதிமுகவினர் அஞ்சுவது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று கள்ளக்குறிச்சியில் கேள்வி எழுப்பினார்.
கட்சிப் பிரமுகர் இல்ல நிழக்ச்சிக்காக இன்று கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களக்கு அளித்தப் பேட்டி.
சசிகலா நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் வருகையின் போது, கலவரம் நடக்க வாய்ப்புள்ளது எனக் கூறி தமிழக மூத்த அமைச்சர்கள் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி திரிபாதி, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த காலத்திலிருந்தே நேர்மையானவர். அவர் எக்காரணத்தைக் கொண்டும் உள்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது.
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு விவசாய நிலமிருக்கிறது. அவர் விவசாயி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக அவர் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு தான் விவசாயி என அடையாளப்படுத்தவேண்டும் என அவசியமில்லை. அதேநேரத்தில் புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது எனக் கூறுவது எள்ளவும் ஏற்கத்தக்கது அல்ல.
விவசாயிகள் தங்களது பயிர்க் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஓராண்டுக்கு முன் போராடிய போது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றவர் தான் பழனிசாமி என்பதை விவசாயிகள் நன்கு அறிவர்.
தற்போது விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறோம். இது தேர்தல் அரசியலை முன்வைத்து தான் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதையும் விவசாயிகள் உணருவர். எனவே கடன் தள்ளுபடி மூலம் வாக்குகளை பெற்றுவிடலாம் என அவர் நம்புவாரேயானல் அவை பொய்த்துவிடும்.
ஏனெனில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஏதிரான திட்டங்களை செயல்படுத்திவருவதை இவரது அரசு ஆதரிப்பதால், பாஜக அரசு மீது மக்களுக்கு எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளதோ, அதே மனநிலையில் தான் தமிழக அரசும் மீதும் மக்களுக்கு வெறுப்பு உள்ளது.
எந்தவொரு கட்சியையும் அந்தக் கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவை வெளியில் இருக்கும் வேறொரு கட்சித் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
வெளியில் இருக்கும் கட்சியின் சொல்படி தான் அதிமுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. அந்த ஒருங்கிணைப்பாளர்கள் வரும் காலங்களில் தொடர்வார்களா அல்லது வேறொருவர் பொதுச்செயலாளர் தலைமையில் இயங்குமா என்பதையும் வெளியில் இருக்கும் வேறொரு கட்சித் தான் தீர்மானிக்க கூடிய நிலையில் அதிமுக உள்ளது.
எதிர்வரும் 18-ம் தேதி மதுரையில் தமிழகத்தை மீட்போம் என்ற மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இதில் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
காவல்துறை மிகப் பெரிய கட்சியின் உள் விவாகரத்தில் தலையிடுவது சரியல்ல. காவல்துறை தலைவர் திரிபாதி நேர்மையான அதிகாரி அவர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கள்ளக்குறிச்சியில் பேட்டி