உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 6
விவாகரத்து வேண்டாம்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன். மத்தேயு 19.6
இந்தவாரம் (11.02.2021) டென்மார்க் தொலைக்காட்சி 1இல் ரெக்ஸ் ரிவியில் வாசித்த ஓர்பகுதி இந்த சிந்தனையை எழுதத்தூண்டியது. 2020ம் ஆண்டு சுமார் 20000 குடும்பங்கள் கொவிட் 19 காலப்பகுதியில் விவாகரத்து செய்துள்ளனர் என்று. அந்த விபரம் எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. திருமணத்தின் உன்னதத்ததை அவர்கள் அறியவில்லை என நான் நினைத்தேன். அப்பொழுது நான் வாசித்த ஓர் கிறிஸ்தவ குடும்பத்தினரின் சாட்சி எனக்கு நினைவிற்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்த கிறிஸ்தவ குடும்பத்தில் முதன்முறையாக வாக்குவாதம் ஏற்பட்டபோது ”நேர்மையுடன் சண்டையிட” தேவன் கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் ஜெபித்தார்கள். நாங்கள் ஏன் அவ்வாறு ஜெபித்தோம்? ஏனென்றால் நாங்கள் விவாகரத்தைக் குறித்துச் சிந்திக்கவில்லை. இயேசுகிறிஸ்து எங்கள் குடும்பத்தின் மையம் என்றும், எங்களுடைய திருமண உடன்படிக்கையில் நாங்கள் ஒருவருக் கொருவர் உண்மையுடன் இருக்க முடியும் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
பல தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வதன் காரணம், அவர்களுக்குள் சண்டைகள் ஏற்படுகின்றன அல்லது தங்களுக்குள் உடன்பாடு இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அல்லது தங்களுக்குள் ஒரு அன்பான உறவுமுறையை அவர்கள் உணருவதில்லை. இதை நாம் குற்றமில்லாத விவாகரத்து என்று அழைக்கலாம்.
உண்மையில், இப்படிப்பட்ட விவாகரத்து, குற்றமில்லாத விவாகரத்து அல்ல. இயேசுவின் போதனையின்படி, (வேதாகம அடிப்படையில்) அது இருதய கடினத்தின் விவாகரத்தாகும். சிலவேளைகளில் நம்முடைய இருதயம் கல்லைப்போல் கடினமாகிறது. கடினமாகிற இருதயம் பலதம்பதியினரின் விவாகரத்திற்குக் காரண மாகிறது. சில சூழ்நிலைகளில் வேதாகமம் விவாகரத்தை அனுமதிக்கிறது. ஆகையால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயல்லாமல் அவளைத் தள்ளிவிட்டு .. மத்தேயு 19. 9, ஆகிலும், அவவிசுவாசி பிரிந்து போனால் பரிந்து போகட்டும், இப்படிப்பட்ட விடையத்தில் சகோதரனாவது, சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல. சுமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத் திருக்கிறார். 1 கொரிந்தியர் 7. 15. ஆனால் ” தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கா திருக்கக்கடவன்”. மத்தேயு 19.6 என்ற இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கணவனும் மனைவியும் தங்களுடைய திருமணத்தை உடைக்கக்கூடிய இருதய கடினத்தை இனங்கண்டு கொண்டால், ஒரு அன்பான, ஒரு நீடித்த உறவு முறையை அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். தேவன் தங்களின் இருதய கடினத்தை நீக்கி, தங்களை கிறிஸ்துவின் அன்பினால் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் ஜெபிக்கும்போது, அவர்கள் ”நேர்மையுடன் சண்டைபோடுவதற்கு” மட்டுமல்ல, ஆனால் ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கவும் அவர் அவர்களுக்கு கற்பிக்கிறார்.
பல மக்கள் திருமணத்தின் நன்மை அல்லது தீமையைக் குறித்து சிந்திக்கிறார்கள். ஆனால் அதன் முடிவைக் குறித்து சிந்திப்பதில்லை.
அன்பின் பரலோகபிதாவே, இந்த நற்சிந்தனையை தியானத்துடன் வாசித்த மக்கள் மத்தியில் திருமணமுறிவைக் குறித்து சிந்திப்பவர்கள் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் ஓர் திருப்பம் உண்டாகட்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு வாழக்கூடிய மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்து, மகிழ்ச்சியுடன் வாழவழி செய்து கொடுக்பும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல தகப்பனே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark