ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணை..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் புதிய யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த புதிய யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அந்த நாடுகள் அறறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளன.

ஐக்கிய இராஜியம், கனடா, ஜெர்மன், வட மெசிடோனியா, மொன்டிகிரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.

இலங்கை பொறுப்பு கூறல், நல்லிணக்கம் மற்றும் சகல இனத்தவர்களுக்கு இடையில் காணப்படும் உரிமைகளை பாதுகாத்து சமாதானத்தை கட்டியெழுப்ப முழுவீச்சில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

குறிப்பாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல், கன்ணி வெடி அகற்றல், காணிகளை மீளளித்தல், உள்ளக இடம்பெயர்வுகளுக்கு உள்ளான மக்களை மீள் குடியேற்றல் போன்ற விடயங்களில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

ஆனால் நாட்டில் நிலையான அமைதி மற்றும் யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளில் முன்னேற்றம் தேவை எனவும் அந்த நாடுகள் கூறியுள்ளன.

ஆகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அந்த நாடுகள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இவ்வாறான யோசனைக்கு அப்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய நிலையில் தற்போதைய அரசாங்கம் அதிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts