நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சந்தித்து பேசினார்.
சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல் கூறி வந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கூறப்படுகிறது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்துடன் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.