கோடிக்கணக்கான பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

இலங்கையில் நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பொதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த பணம் பதுக்கு வைப்பட்டிருக்கலாம் எனவும், நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிடும் கணக்குகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களால் வங்கிகளில் பணம் வைப்பிலிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

இதற்கு முன்னர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அண்மைய காலமாக அந்த நடவடிக்கையும் முடியாமல் போயுள்ளது.

——-

புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். எனினும் பெரும்பான்மையினத்தவரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ் மக்களுக்கும் சமளவான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது யோசனைகளைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவித்த கருத்தில்,…

தமிழர்கள் தமது கௌரவத்தை, சமத்துவத்தை, நீதியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். ஆகவே எமது சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

—–

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த நிலையில் 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24ஆம் திகதி காலையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பில் இருந்து இணைய வழியூடாக உரையாற்றவுள்ளார்.

தினேஷ் குணவர்த்தன உரையாற்றும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts