விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.
வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் பின்னர் ஹட்டனில் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவரின் கைப்பேசியயை சோதனையிட்டதில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பல்வேறு செய்திகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
—
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.
வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் தருமகுலநாதன் வயது 39 கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவரைத்தேடி வவுனியாவில் 1,465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
—
இலங்கைக்கு இன்றைய தினம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைத்து வரும் விமானம் இந்திய வான் பரப்பில் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது.
இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.