கொரோனாவால் தமிழில் தயாரான பெரிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்த நிலையில் முடங்கின. ஊரடங்கை தளர்த்தியபின் இவற்றின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கொரோனாவால் தமிழில் தயாரான பெரிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்த நிலையில் முடங்கின. ஊரடங்கை தளர்த்தியபின் இவற்றின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த வருடம் கோடையில் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வர உள்ளன. சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், விஷ்ணு விஷால், ராணா நடித்துள்ள காடன் ஆகிய படங்கள் மார்ச் மாதம் வெளியாகிறது. கார்த்தியின் சுல்தான், தனுசின் கர்ணன், விக்ரமின் கோப்ரா, சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து கபில்தேவ் வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள 83 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகிறது. இதில் கபில்தேவாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஶ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளனர். சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ள எனிமி, விஜய்சேதுபதி, சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ள லாபம், சந்தானம் நடித்துள்ள சபாபதி ஆகிய படங்களையும் கோடையில் வெளியிடுகிறார்கள்.