ஐதராபாத்தில் நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்தபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்பினார்கள்.
கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் முடிவில் இருந்தனர். ஆனால் தொற்று நீடிப்பதால் படக்குழுவினர் மத்தியில் குழப்பம் நிலவியது. இந்த நிலையில் அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4-ந் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். இதனால் படப்பிடிப்பை விரைவில் முடித்து தொழில்நுட்ப பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயம் இயக்குனர் சிவாவுக்கு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரஜினியுடன் அவர் ஆலோசித்ததாகவும், இதையடுத்து படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள ரஜினி சம்மதித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பில் ரஜினிக்கு கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.