பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து மீ டூ வில் புகார் சொல்லி வருகிறார்கள்.
பட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து மீ டூ வில் புகார் சொல்லி வருகிறார்கள். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், திருட்டுப்பயலே 2, இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு தனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டு உள்ளது என்றும், விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்றும் ஏற்கனவே புகார் கூறி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போது மீண்டும் மீ டூ புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள பதிவில், “பெரிய நடிகர் படத்தில் நடிக்க சமரசமாக வேண்டும். தவறினால் நடிகையின் திறமை நிராகரிக்கப்படும். எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” என்று குறிப்பிட்டு உள்ளார். ஷாலு ஷம்மு பெரிய நடிகர் என்று குறிப்பிட்டு இருப்பதால் அது எந்த நடிகர் என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.