வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர், முதல் முறையாக தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ளார்.
இந்தநிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் உதயநிதி ஸ்டாலினும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில், அவரது பேரனான உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று பிரசாரத்தில் பேசிய அவர், ‘ வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் தேர்தலில் நிராகரிக்கட்டும். எம்.எல்.ஏ பதவி என்பது நியமனப் பதவி கிடையாது. மக்களால் தேர்தெடுக்கப்படும் பதவி’ என்று கூறினார்.