இலங்கை ரூபா பெறுமதி இழப்பதால் நாடு வீழ்ச்சியடையும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி இழப்பை தவிர்ப்பதற்காக தங்களிடமுள்ள வழிமுறைகள் என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டுமென அவர் தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி காரணமாக இலங்கை பல பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையால் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையேற்படும்.
வெளிநாட்டு நாணய கையிருப்பு அற்றுப்போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உள்நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றதெனவும் அவர் குற்றம்சாட்டினார்.