தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா தொற்று!

சென்னை ஆவடியில் கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் தொற்றின் வேகமும் அதிகரித்துதான் வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஷ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுபோல் தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் சமீப நாட்களாக கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது.
இதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் தடுக்கவும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டதிற்கு உட்பட்ட ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் கடந்த 6 தேதி கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டார். இதை தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட பின் ஆசிரியருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts