ரியூப் தமிழ் பணிப்பாளர் டிவன்யா, மற்றும் விமல்ராஜ் ஆகியோர் கைது குறித்த தமிழ், சிங்கள ஆங்கில செய்திகள் இன்றைய தலைப்பு செய்தியாக பல ஊடகங்களில் இடம் பிடித்துள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஊக்கப்படுத்திய பெண்ணும் இருவரும் கைது என்று அவை எழுதியுள்ளன. ஆனால் பெண்ணும் இன்னொருவருமாக இருவர் என்பதே உண்மையாகும். அவ்வாறு அவர்கள் செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததனவா என்பதற்கான விளக்கங்களை அங்கு காண முடியவில்லை. ஆனால் பத்து வரையான கணிகளை எடுத்து சென்றுள்ளதாகவே தெரிவிக்கிறார்கள்.
ஆனால் சர்வதேச சட்டங்களை மதித்து, சர்வதேச பரிபூரணமான ஜனநாயக மரபுகளை பேணி, சிறிலங்காவில் உள்ள சட்டங்களை முழுமையாக கடைப்பிடித்தே ரியூப்தமிழ் இயங்குவதாகவும், எந்த ஒரு தாபனத்துடனும், சக்திகளுடனும், நாடுகளுடனும் தொடர்பற்ற முற்று முழுதான சுயாதீனமான கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் செயற்படும் தாபனம் என்று பல சந்தர்ப்பங்களில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த கைதுகள் சரியா தவறா என்ற கோணத்தில் கொழும்பு பத்திரிகைகளுடைய செய்திகள் எதுவும் எழுதப்படவில்லை. மேலும் இலங்கையில் மட்டுமல்ல இன்று உலகம் முழுவதும் இந்த செய்தி காட்டுத்தீ போல பல நாட்டு ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவில் இது குறித்த பொலிஸ் ஊடக பேச்சாளரின் சிங்கள மொழி மூலமான காணொளியும் வெளியாகியிருக்கிறது. இந்த கைதுகளிற்கிடையேயும் ரியூப் தமிழ் பணிகள் தொடர்கின்றன. கடுகளவும் ரியூப் தமிழ் சட்ட முரணாக நடக்கவில்லை என்று ரியூப் தமிழ் பணிப்பாளர் முன்னரும் பல தடவைகள் கூறியதை மேலை நாடுகளில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அலைகள் 29.03.2021