ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ஶ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ஶ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடிக்கின்றனர். சயீப் அலிகான் ராவணனாக வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் 3 பாகங்களாக இந்த படத்தை எடுக்க இருப்பதாகவும் ராமராக ஹிருத்திக் ரோஷனும் சீதையாக தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ஹிருத்திக் ரோஷனுக்கு பதில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ராமர் கதாபாத்திரத்துக்கு மகேஷ்பாபுவின் முகம்தான் பொருத்தமாக உள்ளது என்று அவரை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.