என்னை பற்றி சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான்கள் குறித்தும் சுறாக்கள் குறித்தும் முன்பு என்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தற்போது சூழல் குறித்து குற்றம்சாட்டுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தின் 17 ஆம் கட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வட மாகாணத்தில் இடம்பெற்ற முதலாவது கிராமத்துடன் கலந்துரையாடல் இதுவாகும்.
அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, சூழல் அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலும் புற்றுநோய்க் காரணியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
——
உண்மையை மறைக்க முற்படாதீர்கள்..
அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சுமந்திரனின் கருத்து குறித்து சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை.
—–
சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய _ இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பைப்பர் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்து இறங்கியதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையின்போது கைதான இருவரும் மன்னார் மாவட்டம் கடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஷ் என தெரியவந்துள்ளது. இவர்களை திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறி தமிழகத்திற்கு வரவழைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.