வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிமேல் நாட்டிற்குள் நுழைய வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, கடந்த வருடம் (2020) வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமான இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். அதன் பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில், தங்களது சொந்த செலவில் நாடு திரும்ப தயாராக உள்ளவர்கள், வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு குறித்த அனுமதி அவசியமில்லையென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
——
கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பஸ் சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக நேற்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு கடமையிலீடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன விபத்துக்களால் நேற்று முன்தினம் (04) 07பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் விபத்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகூடிய வாகன விபத்துக்களைப் பதிவுசெய்த காலப்பகுதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.