அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன் என்று தி ராக் என அறியப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.
ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் டுவைன் ஜான்சன். தொழில் முறையில் மல்யுத்த போட்டி வீரரான, சாம்பியன் பட்டம் வென்றவரான, மக்களால் தி ராக் என அறியப்படும் ஜான்சன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க அதிபராக போட்டியிடுவது பற்றி பதிலளித்து பேசினார். அவர் கூறும்பொழுது, இதனை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக பணியாற்ற தயார் என கூறினார்.
இதபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வழுக்கை தலையுடன், பாதி கருப்பினத்தவராகவும், பாதி சமோவா நாட்டினராகவும் உள்ள, மதுபானம் குடிக்கும், லாரி ஓட்டும் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்க விரும்புவார்கள் என்பதில் எனக்கு உறுதியில்லை. ஆனால், அது நடந்ததென்றால் மக்களுக்கு சேவை செய்வதென்பது எனக்கு கிடைக்கும் கவுரவம் என்று தெரிவித்து உள்ளார். டுவைன் ஜான்சன் அமெரிக்காவின் அதிபராக 46 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
எனினும், அதிபராக வருவதற்கு முன் சில அனுபவங்களை பெற வேண்டியுள்ளது. மற்றும் அரசியல் கொள்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.