தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா வந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்படாது என தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அறிவுறுத்தி உள்ளார்.
நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்தார்.
—–
கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் செந்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, ‘’எனக்கு கொரோனா வந்தது உண்மைதான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவை இல்லை. பரிசோதனை செய்து கொண்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். டாக்டர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள். எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் பெரிய அளவு பாதிக்கவில்லை.
அதே மாதிரி நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உடம்புக்கு நல்லது. அடுத்த பரிசோதனைக்கு வர சொல்லி இருக்கிறார்கள். கொரோனா தொற்று இல்லை என்று வந்தால் வீட்டில் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். பயப்பட தேவை இல்லை. வாழ்க வளமுடன்” என்று கூறியுள்ளார்.