உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 15

ஈடுஇணையற்ற அன்பும். கரிசனையற்ற நம் வாழ்வும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி ஆத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது. என் பரிதாபங்கள் (காருணியம்) ஏகமாய்ப் பொங்குகிறது. ஒசியா 11:8

இன்றைய சிந்தனையை விளங்கிக் கொள்ளும்படியாக முதலில் ஒரு கதையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு வைத்தியசாலையில் வயதுமுதிர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய படுக்கை அருகே அவரின் வயதான மனைவி உட்கார்ந்திருந்தாள். முதியவர் தனது மனைவியிடம், புஸ்பம், நீ இன்னமும் என் அருகில் உட்கார்ந்து இருக்கிறாயா? என கேட்டார். ஆம் என்று அவள் பதில் அளித்தாள். அவர் தொடர்ந்து அவளிடம் பேசத்தொடங்கினார். பலவருடங்களுக்கு முன்பாக நான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது உனக்கு நினைவிருக்கிறதா? அப்போது நீ என்னோடு இருந்தாய். ஒரு தீ விபத்தில் நாம் எல்லாவற்றையும் இழந்துபோது நீ என்னுடன் இருந்தாய் புஸ்பம். நாம் வறுமை அடைந்தபோதும்கூட நீ என்னை விட்டுப் போகவில்லை என்று அவர் மிகஉருக்கமாக கூறினார். ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிற்பாடு, எனவே நீ எனது வாழ்வின் துர்அதிர்ஸ்டம் என்று கூறிமுடித்தார்.

இது ஒரு நகச்சுவைக் கதை தான். ஆனால் உண்மைகளை எவ்வாறு நாம் புரட்டி, நம்மீது கரிசனை கொள்ளும் ஒருவருடைய அன்பையும், கரிசனையையும் எவ்வாறு அங்கீகரிக்கத் தவறுகிறோம் என்பதை இக்கதை எமக்கு நினைப்பூட்டுகிறது.

ஒருசில வருடங்களுக்கு முன்னர் “பரதேசி” திரைப்படத்தை பார்கத் தூண்டப் பட்டேன். (முடிந்தால் யூ ரியு´ப்பில் பார்க்கவும்.) முழுக்கமுழுக்க சோகம் நிறைந்த படம். இரக்கம், அன்பு, மனிதநேயம் என்ற சொல்லுக்கு அங்கு இடம் இல்லை. அந்த தேயிலைத் தொழிளாளர் மகிழ்ச்சியாக இருந்த ஒரேஒரு கட்டம் இயேசுவின் பிறப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடும்போதுதான். ஆனாலும் அந்த பாமர, ஏழை எழியமக்கள் இயேசுபிரானின் பிறப்பின் மகிமையை, விடுதலையை உணரமுடியாத, உணர்ந்து வாழமுடியாதநிலை. காரணம் அறிவித்தவர்களின் சுயநலம்.

முதற்பாடலில் காப்பாற்றும் தெய்வங்கள் கண்மூடுதே என்ற பாடல். ஒருபோதும் நம் தேவன் கண்களை மூடிக்கொள்ளமாட்டார். வேம் கூறுகிறது, கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. நீதிமொழி 15:3. ஆனால் மக்கள் தமது கண்களை மூடுவதனால் கடவுள் கண்ணை மூடுகிறார் என கூறுகின்றனர்.

தேவன் தம்முடைய மக்களை ஒரு தேசமாக உருவாக்கி பலகடின சூழ்நிலைகளில் இருந்து அவர்களை வழிநடத்தினார். அவர்கள் அவரது அன்பை முற்றிலும் புறக்கணித்தார்கள் என்று மேலே நாம் வாசித்தோம். தேவனுடைய அன்பிற்கு ஈடாக அவரை நேசிக்காமல் தங்கள் சுயத்திற்கு இடம்கொடுத்தனர்.

அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்@ பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் து}பங்காட்டினார்கள். (ஒசியா 11:2). மனந்திரும்ப மறுத்தார்கள் (வச.5). விளைவு பின்மாற்றம் (வச.7). என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்@ அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. வேதம் இவ்வாறு வெளிப்படுத்துகிறது.

ஆனாலும் இரக்கமுள்ள நம்தேவன் தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாத தம்முடைய மக்கள்மீது கோபம் கொண்டாலும் அவர்களைத் தொடர்ந்து நேசித்தார். என் இருதயம் எனக்குள் குழம்புகிறது. என் பரிதாபங்கள் (காருணியம்) ஏகமாய்ப் பொங்குகிறது என்று கூறினார்.

நீங்கள் தேவனைவிட்டு வெகுதூரம் சென்றிருப்பீர்களானால், அவரால் உங்களை தொடர்ந்து எவ்வாறு நேசிக்க முடிகிறது என்று ஒருசிலவேளை நீங்கள் வியக்கலாம். நீங்கள் அவரைவிட்டு வழிவிலகிப்போனதை ஒப்புக்கொண்டு, நீங்கள் பாவ மன்னிப்பைப் பெறும்படி மனுக்குலத்தின் பாவங்களுக்காக, அதாவது எமது பாவங்களுக்காக மரிப்பதற்கு இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பின தேவனுடைய அன்பை நினைத்துப்பாருங்கள். அப்பொழுது தேவனுடைய அன்பு உங்களைவிட்டு நீங்குவதில்லை.

அன்பும் இரக்கமுள்ள நல்ல தகப்பனே, இன்று நீர் என்மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்பை அறிந்துகொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. இதுவரை காலமும் உம்முடைய அன்பை அறியாததற்கும், அறியமனதற்று வாழ்ந்ததற்கும் என்னை மன்னியும். தொடர்ந்து உமது அன்பில் நிலைத்திருந்து, இயேசுவால் அடையும் விடுதலையை கண்டடைந்து, எனது வாழ்வில் காத்து நடக்க உதவி அருளும் நல்ல பிதாவே, ஆமென்

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts