உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் ‘ஹாரிபாட்டர்’. இந்த படத்துக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். ‘ஹாரிபாட்டர்’ படத்தின் பல பாகங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன.
வசூலும் குவித்துள்ளன. ‘ஹாரிபாட்டர்’ படங்களில் நர்சியா மல்பய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி. ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைபால்’ படத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து இருக்கிறார். ஹெலன் மெக்ரோரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஹெலன் மெக்ரோரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. இந்த தகவலை அவரது கணவரும், நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஹெலன் மெக்ரோரி மறைவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
——
தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் உலக அளவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. சில படங்கள் நஷ்டத்தையும் சந்தித்து உள்ளன. ‘காஸ்ஸில்லா வெர்சஸ் காங்’ படத்தின் வசூலும் கொரோனாவால் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரைக்கு வர தயாராக இருந்த வொண்டர் வுமன், ஸ்கார்லெட் ஜோன்சனின் பிளாக் விடோ படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. டாம் குரூஸ் நடித்து 1986-ல் வெளியான டாப் கன் படத்தின் இரண்டாம் பாகம் 34 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி கடந்த ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து பின்னர் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். கொரோனா குறையாததால் மீண்டும் வருகிற ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது 2-வது அலை பரவல் காரணமாக டாப் கன் 2-ம் பாகம் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போகிறது.. இதுபோல் டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாஸிபில் -7 படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.