மராட்டியத்தில் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கர் கசிவால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வுந்துள்ளது.
மராட்டிய மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே கூறுகையில்,
“22 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை நோயாளிகள் ஆக்ஸிஜனை முறையாகப் பெறுகின்றனர் என்றும், 170 நோயாளிகள் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோப் கூறுகையில்,
ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்ததும் நாங்கள் முழு தகவலை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே மராட்டிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி டாக்டர் ராஜேந்திர ஷிங்கானே இந்த சம்பவம் “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.