எம்மைத் தாழ்த்தும் எல்லாச் சூழ்நிலையிலும் உதவும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை. லூக்கா 7:7.
உலகில் வாழும் மக்கள் யாவரும் யுத்தத்தையும், அதன் விளைவுகளயும் பற்றி அறிக்கைகளையும், கருத்துக்களையும் பேசிவருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் கபடமும் சுயநலம் கருதிய செயலும் என நாம் அறிவோம். ஆனால் அவற்றில் இருந்து விடுபட விரும்பாததால் இலங்கைத் தமிழ் மக்களும், உலகம் தாங்கொண துயரத்தை அனுபவிப்பதை நாம் காண்கிறோம். இவற்றிற்கு மூலகாரணம் பெருமை என்ற ஆணிவேராகும். (இன்றைய இலங்கையின் நிலைவரமும் இதுதான்).
இன்றைய தியானத்தை நன்றாக விளங்கிக்கொள்ள லூக்கா 7:1-10 வரை வாசித்துப் பார்க்கவும். ஒருஇராணுவ உயர்அதிகாரின் இராணுவவீரன் கடும்நோயினால் பாதிக்கப் பட்டு மிகவும் வேதனையுடன் காணப்பட்டான். அந்த வேதனையை உயர் அதிகாரியால் பொறுக்க முடியவில்லை. அவன் ஆலயமூப்பரை அணுகி, இயேசு மூலம் குணமடைய உதவிசெய்யும்படியாக வேண்டிக் கொண்டான்.
நாம் இங்கு கவனிக்க வேண்டியது, அவனுக்கு வைத்தியம்செய்ய பலசிறந்த வைத்தியர்கள் இருந்திருப்பார்கள் என்பதை. ஆனால் அவனோ இயேசுவை மட்டும் நாடினான். அவரல்ல அவரின் வார்த்தையே போதுமென்று நம்பினான். இயேசுவிற்கு முன் தான் ஒரு தூசி என்று தன்னைத் தாழ்த்தினான். இதை நாம் வசனம் 7-8 இல் காணலாம்
அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நு}ற்றுக்கு அதிபதி தன்சிநேகிதரை நோக்கி, நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்பட வேண்டாம். நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக் காரன் சொஸ்தமாவான் என்று கூறும்படியாக வேண்டிக்கொண்டான்.
அவன் தனது தகுதியை மறந்தான். தானும் இயேசுவிடம் வரத்தகுதி அற்றவன் என்றும், அவரின் வார்த்தை மட்டும் போதும் என்று தாமதமின்றி அறிக்கை பண்ணினான்.
நாம் நம்மைத் தாழத்;தும் வரையிலும் இயேசு போதுமானவர் என்பதை அறியவோ, உணரவோ முடியாது. நாமோ நமக்கு தேவை இருப்பதையும், அது இன்னது என்பதையும் ஒத்துக்கொள்வதில்லை. நமக்காக நம்மைத் தாழ்த்த மனதற்ற நாம், எப்படி ஏனைய சூழ்நிலைகளில் ஆண்டவரை போதுமானவராக காணமுடியும்?
ஒவ்வொரு மனிதனையும் தனித்தனிய அறிந்திருக்கிறவர் நம் ஆண்டவர். அவரவர் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் செயற்படுவதை நாம் இந்த வேதப்புத்தகத்திலும், நம்மைச்சூழவுள்ள தேவனை நம்பி வாழும் மக்களிடம் காணமுடியும்.
இதனை நன்கு புரிந்து கொள்ளும்படியாக மத்தேயு 9:6 வாசிப்போம். (மத்.9:1-8). ப10மியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனை இயேசுவிடம் அவன் படுக்கையுடன் கொண்டுசென்றனர். இயேசு அவனிடம் உனக்கு என்ன வேண்டும்? என்றோ, குணமடைய விரும்புகிறாயா? என்றோ கேட்கவில்லை. மாறாக அவனைக்கொண்டு வந்தவர்களின் விசுவாசத்தைக் (தாழ்மையை) கண்டவர், நேரடியாக நேயாளியுடன் பேசுகிறார்.
எது முக்கியம் என்று மனிதர்கள் நினைத்தார்களோ அந்தத்தேவையைக் குறித்து இயேசு திமிர்வாதக்காரனுடன் பேசவில்லை. அதைவிட ஓர் முக்கிய தேவை அவனிடம் உள்ளதை அவர் அறிந்திருந்தார். இயேசு அந்த இடத்தை நேரடியாக அணுகினார். அக்காலத்தில் திமிர்வாதம் பாவத்தால் வரும் நோய் என்று மக்கள் நம்பியிருப்பர். (நவீன உலகில் எயிற்ஸ் என்பதைப்போல).
அவர்கள் அவனை பாவமன்னிப்புக்காக கொண்டுவரவில்லை. ஆனால் நமது ஆண்டவர் அதுவே அவனது முக்கிய தேவை என்பதை அறிந்து கொண்டார். அதேநேரம் தேவனை அறிய மனதற்றவர்களின், தேவ மகிமையை அவமாக்குகிறவாகளின் இருதயத்தின் நினைவுகளை இயேசு அறிந்து, நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
ப10மியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். வசனம் 3-7.
சூழவுள்ள மனிதர்களின் இருதயத்தை அறிந்த தேவன், உனது இருதயத்தை அறியமாட்டாரா? தனது மனதில் பாவமன்னிப்பை பெற்ற மனிதன் சரீரத்திலும் விடுதலையடைந்தவனாக எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு தன்வீட்டுக்குப் போனான்.
எந்தவொரு மனிதனும், எந்தவொரு மனிதனின் அந்தரங்கத்தினுள் போகமுடியாது. ஆனால் அந்த ஆழத்தை அறியும் அதிகாரம் தேவனிடம் மட்டுந்தான் உள்ளது. அந்த தேவன் உன் உள்ளிந் திருதயத்தை அறிந்தவர். அவரிடம் உன்னை ஒப்புக்கொடுத்து, பாவங்களை அறிக்கைபண்ணி விடுதலையைப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ உன்னை ஒப்புக்கொடு. அன்பான ஆண்டவரே, நாம் எம்மைத் தாழ்த்தும்போது உம்மிடத்தில் இருந்து கிடைக்கும் மகாபெரியான இரட்சிப்புக்காக உமக்கு நன்றி அப்பா. நானும் என்னைத் தாழ்த்தி, இரட்சிப்பின் சந்தோசத்தை என் வாழ்வில் அடைந்து கொள்ள உதவி செய்து, என்னைக் காத்து வழிநடத்தும் படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டி நிற்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.