தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிது. இந்தஆலோசனை கூட்டத்தில் 33 அமைச்சா்களும் பங்கேற்றுள்ளனா்.
அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.