மிகவும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் தற்போது இருக்கின்றதென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேரில் 54 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அறியமுடிவதுடன், வாழைச்சேனை பிரதேசத்தில், 129 ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 55 ஆகவும் குறிப்பிடப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று மரணம், 2.1 வீதமாகவும்தேசிய ரீதியில் 0.1 வீதமாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மடங்குக்கு மேலாக மரணவீதம் காணப்படுகின்றது. இதனால் மரண வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாகவுள்ளதென கூறலாம் என்றார். எனவே மக்கள் இதன் ஆபத்து நிலையை அறிந்து சரியான இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணவேண்டும். கடந்த 24 மணித்தியாலத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. இருமல், தடிமன் மற்றும் சுவாசம் கஷ்டமாக இருந்தால் உடனடியாக பக்கத்திலுள்ள வைத்தியரை நாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.