கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விநாயகபுரம் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிசார் முற்றுகையிட்டனர்.
இதன்போது கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 கலனில் 24 லீற்றர் கள்ளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

—-

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவின் முழங்காவில் கிராம அலுவலரும் அவரது மனைவியும் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு ஏழு மணியளவில் முழங்காவில் பல்லவராயன் கட்டுச் சந்தி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் விழுந்து கிடப்பதனை இராணுவத்தினர் அவதானித்துள்ளனர்.
உடனடியாக பட்டா ரக வாகனத்தில் கிராம அலுவலரின் மனைவியை முழங்காவில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கிராம அலுவலர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் முழங்காவில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
விபத்தினால் மரணம் சம்பவித்ததா? அல்லது யானை தாக்கி இறந்தனரா என்பது தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் பெற்றோர்களான கிராம அலுவலர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

—–

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
பசுபிக் ஒக்மெண்டேஷன் அணியின் பணிப்பாளர் பிரட் லீடர் மற்றும் சிவில் ராணுவ துணை பிரிவின் பணிப்பாளர் டோனி ஷூ ஆகியோர் இந்த பிசிஆர் கருவிகளை இராஜாங்க அமைச்சர்களான சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோரிடம் வழங்கினார்.
இதுதொர்பான நிகழ்வு நேற்று (25) சுகாதார அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts