நாட்டின் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமைகளை மறைப்பதற்கான ஒரு கருவியாகவே ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாரென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து மங்கள சமரவீர திங்கட்கிழமை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது, ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
ரிஷாட் பதியுதீன் 90 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைய உறுப்பினராக அங்கம் வகித்த காலத்திலேயே அவரை நான் நன்கு அறிவேன். அவர் மிகவும் அர்ப்பணிப்பான, உண்மையான பக்தியுடைய முஸ்லிமாக இருந்தபோதிலும் எப்போதும் அவர் ஒரு தீவிரவாதியாக இருந்ததில்லை. தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு பலிக்கடாவாகவே ரிஷாட் பதியுதீன் பயன்படுத்தப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.