தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 15,595 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

——

இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

மேலும், மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மே 22 ஆம் திகதி ஒருவரும், மே 23 ஆம் திகதி ஒருவரும், மே 24 ஆம் திகதி 02 மரணங்களும், மே 25 ஆம் திகதி 07 மரணங்களும், மே 26 ஆம் திகதி 12 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆகும்.

Related posts