இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (05) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,696 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 46 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,742 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் மே 17 – ஜூன் 05 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 46 பேரில், 23 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
—–