12,13ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்;
நாட்டில் பயணத் தடை நடைமுறையிலுள்ள போதும் மொத்த வியாபாரிகள்
மற்றும் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாகவே இரண்டு தினங்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

—–
ஏற்கனவே அறிவிக்கப்பட்படி, தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன்14ஆம் திகதி நீக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுபாடுகள் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்படுமென பரப்பப்படும் வதந்திகள் தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 25ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு ஜூன் 07இல் நீக்கப்படுவதாக இருந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, 19 நாட்களின் பின் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளது.

—–

தென்மராட்சி- மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதி ஓரமாகக் காணப்பட்ட பிள்ளையார் ஆலயம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவ்விடத்தில் விபத்து நேர்ந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. சுமார் முந்நூறு வருடங்கள் பழமையான குறித்த ஆலயம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts