கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளது.
—–
இன்று (11) நள்ளிரவு முதல் 12 முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
——
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts