இலங்கையில் இதுவரை 2,136 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 63 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 2,073 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 63 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 2,136 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் மே 23 – ஜூன் 11 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 63 பேரில், 33 பேர் ஆண்கள், 30 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
—–
குண்டசாலையில் மஹமெவ்னா தியான நிலையத்தின் தர்ம போதனை மண்டபம் இன்று (12) தொடக்கம் கொவிட் இடைத்தங்கல் சிகிச்சை நிலையமாக இயங்கவிருக்கிறது.
இது மத்திய மாகாணத்தில் நிறுவப்பட்ட மிகப்பெரிய கோவிட் இடைத்தங்கல் நிலையமாக இருக்கும். அதில் ஆயிரம் பேர் தங்கி இருக்கக்கூடிய கட்டில் வசதிகள் உள்ளன. சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகேவின் ஆலோசனைக்கமைய, பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஏற்று, மஹாமெவ்னா தியான நிலையத்தின் ஸ்தாபகர் கிரிபத்கொட ஞானாநந்த தேரர், இந்த தர்மபோதனை மண்டபத்தை கொவிட் பராமரிப்பு நிலையமாக மாற்ற இணக்கம் தெரிவித்திருந்தார்.
சுமார் 12 ரூபா செலவில், இதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை படையினர் ஏற்படுத்தி இருந்தார்கள்.

Related posts