எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்கு உள்ளான காரணத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து இந்நாட்டு மீன் வியாபாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
´நாம் தினம் தோறும் பச்சையாக மீன்களை சாப்பிட்டு காட்டுகிறோம். எனினும் மீன் வியாபாரம் குறைவடைகிறது. குறித்த ஆமைகள் இன்று நேற்று உயிரிழக்கும் விலங்குகள் இல்லை. பல வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்து தற்போது கரையொதுங்கி வருகின்றன. என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல கடற்கரைகளில் உயிரிழந்த நிலையில் விலங்குகளின் சடலங்கள் கரையொதுங்கி இருந்தமையை அவதானிக்க கூடியதாய் இருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.