தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது கொரோனா பரவல் காரணமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது.