யாழ். மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனமொன்று குறைப்பு செய்யப்பட்டு கம்பஹா மாவட்டத்துக்கு புதிதாக ஒரு ஆசனம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான புதிய கணிப்பீட்டின் அடிப்படையில் இது இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது கம்பஹா மாவட்டத்தில் 18 பாராளுமன்ற ஆசனங்கள் காணப்படுவதுடன், அது 19ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
தேவேளை, யாழ்.மாவட்டத்தில் 07 ஆக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 06ஆக குறைப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கையில் புதிதாக 1,72,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வருடாந்தம் மாவட்டங்களில் பதிவாகும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்-. ஆசனங்களை 6 லிருந்து 60 ஆக கூட்டினாலும் எதுவும் நடக்காது என்பதற்கு 72 வருட்கள் போதுமானது..