ஜூலை 01 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பொதிகளுக்கு வரி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பும் கடிதங்கள் தவிர்ந்த அனைத்து பொதிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றிய (EU) வரிக் கொள்கை பின்பற்றப்படுமென, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.
ஜூலை 01 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் அமுலாவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 150 யூரோ பெறுமதிக்குட்பட்ட அனைத்து பொதிகளுக்கும், உரிய ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு பொதி உரிமையாளரினால் நேரடியாக அதற்கான VAT வரியை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
150 யூரோவிற்கு அதிக பெறுமதி கொண்ட பொருட்களுக்கு, உரிய VAT வரிக்கு மேலதிகமாக, உரிய நாட்டிற்கான சுங்க வரிக் கொள்கை பின்பற்றப்படும் என்பதால், அதற்கான வரி குறித்த பொருளை பெறுபவரிடமிருந்து அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
—–

நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது என தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26) என்பதால் அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

——

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு உள்ளானதில் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இடைக்கால இழப்பீடாக 720 மில்லியன் ரூபா வழங்க காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related posts