புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு அனுப்புவது இடைநிறுத்தம்
அதற்கமைய, இலங்கையிலுள்ள ஏதேனும் சொத்திலிருந்து தனது உடனடி குடும்ப உறுப்பினரொருவரிடமிருந்து புலம்பெயர்ந்த ஒருவரினால் பண அன்பளிப்புகளாக பெறப்பட்ட நிதியங்களிலிருந்து புலம்பெயர் முற்கொடுப்பனவின் கீழ் நிதியங்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
10,000 டொலராக மட்டுப்பாடு
அத்துடன், ஏற்கனவே பொதுவான அனுமதியின் கீழ் புலம்பெயர் முற்கொடுப்பனவை கோரும் புலம்பெயர்ந்தவர்களினால் மூலதன கொடுக்கல் வாங்கல் ரூபாய்க் கணக்குகளின் ஊடாக புலம்பெயர் முற்கொடுப்பனவின் கீழ் நிதியங்களை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்புவதை உச்சபட்சம் 10,000 அமெரிக்க டொலராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.