சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய பின் நடிகர் வடிவேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். மிகவும் எளிமையாக, குடும்பத்தில் ஒருவரைப் போல என்னிடம் பேசினார். முதல்-அமைச்சரை நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளேன்.
அதிகமான படங்களில் இனி என்னைப் பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். திரைப்படங்களிலும் ஓடிடியிலும் நான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக நல்லதே நடக்கும்.
நான் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டேன். இன்னும் 40 தடுப்பூசிகள் போடச் சொன்னாலும் போட்டுக்கொள்வேன். அந்தளவுக்குப் பீதியாக உள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேட்கிறீர்கள். ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும்? நான் அரசியல் பேசவில்லை. அது வேண்டாம். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.
ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம்.கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார் .
தமிழக முதல்-அமைச்சரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.
அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக் காட்டி வலியுறுத்தினார்.
“மாஸ்க் போடுங்கப்பானா நாங்களாம் தேக்கு ணே , போ… ணே , போ… ணே னு சொல்றான் ; யப்ப தேக்குனாலும் கொரோனா அரிச்சிரும்பா…!” என கூறினார்.
நான் ரெண்டு ஊசி போட்டுட்டேன். இன்னும் நாற்பது ஊசி போடச்சொன்னாலும் போடுவேன். ஏன்னா, இன்னும் பீதியா இருக்கே, அதனால, மக்கள் முன்வந்து ஊசி போடணும்.
தொடர்ந்து சினிமாவுல இருந்து சீரியல் வந்துச்சு. இப்ப ஒடிடினு அடுத்தடுத்த டெக்னாலஜிக்கு போயிட்டுத்தானே இருக்கு. சினிமா பேரன் பேத்தி கொள்ளுப் பேத்தினு போய்க்கிட்டே இருக்கு. இது இன்னொரு குட்டி போடும். ஒடிடி அது இன்னொரு குட்டி போடும். அப்படியே போய்க்கிட்டேதானே இருக்கும். காலத்திற்கு தகுந்த மாதிரி நாமளும் நடிச்சிட்டே போக வேண்டியதுதான் என கூறினார்.
கொங்குநாடு சர்ச்சை குறித்து விமர்சித்த அவர், ராம்நாடுனு ஒண்ணு இருக்கு. ஒரத்தநாடுனு ஒண்ணு இருக்கு. இப்படி நிறைய போய்க்கிட்டு இருக்கு. நல்லா இருக்கற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு? ‘நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது.
மீண்டும் இனி அதிக படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.