கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை, டோக்கியோ நகரில் துவங்க உள்ளது.
ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவினை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 950 பேர் பிரதான அரங்கத்தில் பார்க்கவுள்ளனர்.
அந்தக் குழுவிற்கு மேலதிகமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.
அதில் இருந்து போட்டிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் முக்கிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஹிடேமாசா நகாமுரா வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 6 அதிகாரிகள் மட்டுமே இந்த துவக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள்.
ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பெட்மிண்டன், வில்வித்தை, ஹொக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.
சிலி நாட்டின் தேக்வாண்டோ வீராங்கனை பெர்னாண்டா அகுயர், செக்குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பாவெல் சிரூசெக், டச்சு ஸ்கேட்போர்ட் வீராங்கனை கேண்டி ஜேக்கப்ஸ் ஆகியோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் பெர்னாண்டா அகுயரை தவிர்த்து மற்ற இரு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சார்பாக இம்முறையும் ஒன்பது வீர வீராங்கனைகள் பங்குகொள்கிறார்கள். நம்ம நாடு விளையாட்டின் மூலமே தன்னை பெரிதும் உலகறிய வைத்தது அதில் கிரிக்கெட்டை ஐ போலவே ஒலிம்பிக் போட்டிகளும் முக்கியம் பெறுகிறன. அதிலும் மெய்வல்லுனர் போட்டிகள்.
1928 இல் ஆரம்பமானது இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் இல் பங்கு பெற்ற தொடங்கியது. அதன் பின்னர் 1948 இல் பங்குகொண்டார்கள், முதன் முதலில் Duncan White 400மீ தடை தாண்டலில் 1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 1952, 1956, 1960, 1964, 1968, 1972, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012 மற்றும் 2016 என நம் நாட்டு வீரர்கள் பங்கு பற்றி இருந்தது குறிப்பிட தக்கது.
1976, 1984 இல் யாரும் பங்குகொள்ளவில்லை. 1948 இன் பின்னர் இலங்கைக்கு சுஷந்திகாவினால் மீண்டும் ஒரு வெள்ளி பதக்கம் 2000 ஆண்டு சிட்னியில் 200மீற்றர் ஓட்ட போட்டியில் கிடைத்தது.
தமயந்தி தர்ஷா, சிரியானி குலவன்ஷ, சுகத் திலகரட்ன, ரோஹன் பிரதீப்குமார போன்ற பல சர்வதேச புகழ் பெற்ற வீரர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.
இம்முறை 2020 இல் மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இருவர் யுபுன் அபேக்கூன் 100மீ, நிமாலி லியனாராச்சி 800மீ போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர்.ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றும் பொருட்டு ஊவா மாகாணத்தின் பசறை தமிழ் மகா வித்தியலாத்தில் (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றும் மாரிமுத்து அகல்யா ஜப்பான் பயணமானார்.
ஒலிம்பிக் விளையாட்டு விழா வரலாற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றுவதற்கு தெரிவாகியுள்ள முதலாவது இலங்கை தமிழர், குறிப்பாக மலையகத் தமிழர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் இதன் மூலம் அகல்யா உரித்தானார்.
தேசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா உட்பட சர்வதேச பட்மின்டன் போட்டிகள் பலவற்றில் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றியுள்ள தனக்கு ஒலிம்பிக்கில் கடமையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதைப் பெரும் பாக்கியமாக கருதுவதாக அகல்யாக குறிப்பிட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் யோசனையை ஊக்குவித்து வருகின்றனர். கிராமத்தை விட்டு வெளியேறியவுடன் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டோக்கியோ 2020 இன் அமைப்பாளர்கள் நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 ஆணுறைகளை வழங்கி உள்ளனர்.
ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆனால் விளையாட்டு வீரர்கள் (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று அமைப்பாளர்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் ஒரு ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கையை அறிமுகபடுத்தி உள்ளனர். இது விளையாட்டு வீரர்கள் நெருக்கத்தை குறைக்க ஊக்கப்படுத்தும்.
தற்போது வீரர்களுக்கு ‘பாலியல் எதிர்ப்பு’ படுக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன, மேலும் அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது.
இதுகுறித்து அமெரிக்க தொலைதூர ஓட்டப்பந்தய வீரர் பால் செலிமோ தனது டுவிட்டரில் படுக்கையின் படங்களை பகிர்ந்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-
“டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் தயாரிக்கபட்டு வழங்கப்படுகிறது. இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுகளுக்கு அதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு படுக்கைகள் ஒரு தனி நபரின் எடையை மட்டுமே தாங்க கூடியதாக உள்ளது.
படுக்கை இடிந்து விழுந்தால் தரையில் தூங்க வேண்டும். இந்த நேரத்தில் நான் தரையில் எப்படி தூங்குவது என பயிற்சி செய்யத் தொடங்குவேன்; காரணம் என் படுக்கை இடிந்து விழுந்தால், தரையில் தூங்குவதற்கான பயிற்சி எனக்கு இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
மீண்டும் ஒருமுறை இலங்கை கொடியுடன் தேசிய கீதமும் டோக்கியோ மைதானத்தில் கண்களால் பார்க்கவும் கேட்கவும் கிடைக்கட்டும்.