ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார்.
எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார். எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.