ராகமை போதனா வைத்தியசாலையில் தகனம் செய்ய முடியாமல் கொவிட் சடலங்கள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 சடலங்கள் தகனம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள தகன மேடைகள் செயலிழந்து உள்ளதால் குறித்த உடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் மேலும் 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரையில் 2,796 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,794 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.