பிறந்த சிசுவுக்கு கொரோனா

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவிலுள்ள காட்மோர் தோட்டத்தில் பிறந்த சிசு கொராேனா தொற்றால் உயிரிழந்தது.
கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் மகபேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொவிட் 19 தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் அவரது கணவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது அதில் அவருக்கும் கொவிட் 19 தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவர் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அப் பெண் குழந்தையை பிரசவித்த போது குழந்தை இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இறந்த சிசுவுக்கும் கொவிட் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரி நரேந்திர குமார் தெரிவித்தார் .
தற்போது தந்தை, தாய் இருவரும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
—–
டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தெரண அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என அவர் தெரிவித்துள்ளார்.
5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts