வரலாற்று சிறப்புமிக்க 200 வருட வரலாற்றை காெண்ட பேராதனை தாவரவியல் பூங்காவை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்
பேராதனை தாவரவியல் பூங்காவின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தில் நேற்று (11) காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :
1747 முதல் 1780 வரை மூன்றாம் விக்ரமபாகு மன்னர் காலத்தில் இந்த தாவரவியல் பூங்கா அரச தோட்டமாக கருதப்பட்டது. அதன் பிறகு ராஜா ராஜராஜசிங்க பேராதனை தாவரவியல் பூங்காவில் ஒரு தற்காலிக குடியிருப்பை கட்டியதாகவும், 1780 இல் அது தாவரவியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பூங்காவின்போது,., காபி மற்றும் தேநீர் பிரதானமாக இருந்தன. 40 ஏக்கரில் தொடங்கிய இந்த தாவரவியல் பூங்கா தற்பொழுது 147 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
2006 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் தேசிய தாவரவியல் பூங்கா துறை நிறுவப்பட்டது. இந்த நாட்டில் தாவரவியல் பூங்காக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்பொழுது பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பத்துடன் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக எங்களிடம் தரவு உள்ளது. ஈஸ்டர் தாக்குதலால் சுற்றுலா பயணிகள் வருகை தடைப்பட்டது. பின்னர் கொரோனா தொற்றுநோயால் சரிந்தது. கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், தாவரவியல் பூங்காவிற்கு வருபவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.