உண்மையும் ஒப்புரவாகுதலும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக் கொள்கிறோம். 2 கொரிந்தியர் 5:20.
ஒருசில மாதங்களுக்கு முன்னர் முகநூலில் பதிவான ஓர் தலைப்பு மீண்டும் இதனை எழுதத்தூண்டியது. ஒருசில வருடங்களுக்கு முன்னர் நீங்களும் நானும் டென்மார்க் தொலைக்காட்சியில் பார்த்த ஓர் சம்பவத்தை முதலில் சுருக்கமாக விபரிக்க விரும்புகிறேன். தென்;;னாபிரிக்காவில் இனப்பாகுபாட்டால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு ஏதுவாக எந்தக்குடிமகனும் தானாகவே முன்வந்து தாங்கள் செய்த குற்றங்களை உண்மையோடு அறிவித்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
பலகொடுமையின் விபரவங்கள் அறிக்கையிடப்பட்டன. பல குடும்பங்கள் யாரால், எப்போது, எங்கே, எப்படி அழிக்கப்பட்டனர் என்பதை அறிந்து கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் அறிக்கையோடு, தமக்கு அன்று இடப்பட்ட அன்றைய கட்டளைகளின்படியேதான் இவ்வாறு செய்தோம் என்று கூறினார்கள். பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு இந்த உண்மை ஓரளவு ஆறுதலை நிம்மதியைக் கொண்டுவந்தது.
இவற்றை நான் தொலைக்காட்சியில் பார்த்தபோது, உள்ளான மனந்திரும்புதல், மன்னிப்பின் வெளிப்பாடுகளை காணவாஞ்சித்தேன். மெய்யான குணமாதல், ஆறுதலை அடைதல் சிலவேளையில் நடந்தேறியது என்பதில் சந்தேகம் இல்லை. நான் பார்த்ததிலிருந்து ஒரு உண்மையை மட்டும் மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன். அது என்னவெனில் உண்மை மட்டும் ஒப்புரவாகுதலை கொண்டுவராது. உண்மையுடன் கிருபை சேர்ந்தால் மட்டுமே உண்மையான ஒப்புரவாகுதலைக் கொண்டுவரும் என்று. அப்படிப்பட்ட கிருபைக்கு ஆதாரம் என்ன? இயேசுவானவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராக இருந்தார் என வேதம் சொல்கிறது. யோவான் 1:14.
பிதாவாகிய தேவன், இயேசுகிறிஸ்துவை சிலுவையில் மரிப்பதற்கு ஒப்புக் கொடுத்து உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். 2 கொரிந்தியர் 5:19. பாவத்தை மன்னிப்பதில் நம் தேவன் அதிக ஆர்வமுள்ளவராக அன்றுமட்டுமல்ல இன்றும் இருக்கிறார். பாவத்தை மன்னிப்பதற்கான தேவனின் ஆர்வத்தை இயேசு சிலுவையில் பட்டபாடுகள்மூலம் இன்று நாம் காணக்டிகூயதாகவுள்ளது.
அவருடைய மரணம் பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்துவதற்கு போதுமானது. எனவேதான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் அவரால் மன்ளிப்பை அளிக்க முடிகிறது. அதனால் நாம் உண்மையான ஒப்புரவாகுதலின்மூலம் தேவனிடத்தில் இருந்து இரக்கத்தைப் பெறவும், ஏற்றகாலத்தில் சகாயஞ்செய்யுங் கிருபைபை அடையவும் தைரியமாக கிருபாசனத்தண்டை சேரக்கடவோம் என வேதம் தெளிவுபடுத்துகிறது.
இன்று மனுக்குலத்திற்கு, தேவனுடன் ஒப்புரவாகுதலின்மூலம் கிடைக்கும் பாவமன்னிப்பு அவசியமானது. அதை கொடுப்பதற்கு தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் மனந்திரும்பி தாமதமில்லாமல் தைரியத்தோடு அவரை நோக்கி கூப்பிடும்போது அவர் நமது குரலைக் கேட்டவுடன் எங்களுக்கு இரங்குவார். அந்த இரக்கம் வாழ்வில் உள்ள பாவக்கறைகளை கழுவி நீக்கி மனுக்குலத்திற்கு பாவமன்னிப்பையும் இரட்சி;பின் சந்தோசத்தையும் கொடுக்கிறது.
பாவத்தால் கெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு தேவனுடன் ஒப்புரவாகுதலின்மூலம் கிடைக்கும் ஆறுதல் அவசியமாக இருக்கிறது. நம்மில் பலர் தாமாகவே குற்றவுணர்வையும், பாவக்கறையையும், மனோபாவங்களையும் அகற்றமுனைந்து இறுதியில் மனச்சோர்வடைந்து காணப்படுகிறார்கள். இறுதியில் சிலர் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து போகிறார்கள். அதிலும் ஒருசிலர் தமது குற்றத்தை மற்றவர்களின் மேல் போடுகிறார்கள். ஒருசிலர் தம்மை மாற்றிக்கொள்ள முடியாது என்று தமது முயற்சியை கைவிட்டுவிடுகிறார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்டு, கறைபட்டு, ஊக்கமிழந்து போயிருக்கும் மிகமோசமான வர்களைக்கூட ஒப்புரவாகுதலின்மூலம் சீரமைக்கும் திறமைசாலியாக நமது ஆண்டவர் இயேசு இருக்கிறார். அவரை நாம் உண்மையான ஒப்புரவாகுதலின்மூலம் விசுவாசத்தோடு ஏறு;றுக்கொள்ளும்போது, அவர் நம்மை புதுசிருஸ்டியாக, தேவனுடைய கரத்தின் கிரியையாக மாற்றுவார். அந்த நமது தெரிவு நமக்கு புதுவாழ்வை, பூரண அமைதியை, மகிழ்ச்சியை, ஆறுதலைத்தரும். அதை எமது வாழ்வில் கண்டடைந்து கொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடுப்போம்.
அன்பான நல் ஆண்டவரே, இன்று உம்முடன் உண்மையான ஒப்புரவாகுதலினால் மதனிதகுலம் கண்டடையும் நன்மைகளைக் குறித்து அறிய உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. இதுவரைகாலமும் இவைகளை அறியாமல் வாழ்ந்து விட்டேன் அதற்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து உம்முடனான ஒப்புரவாகுதலின்மூலம் உம்முடன் நிலைத்து வாழ்ந்திருக்க உதவிசெய்து காத்துக்கொள்ளும் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக ..
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Prayin for Denmark.