உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கையுறை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உணவு பொருட்களை கையாளும் பணியில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக உணவு விநியோகம் செய்வோர், பார்சல் பேப்பர்கள், கவர்களை பிரிக்க எச்சில் தொட்டு பயன்படுத்துவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உணவு பொருட்களை கையாள்பவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும், வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.